×

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் 2 நாட்கள் ரெட் அலர்ட்..!

சென்னை: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை அடுத்து உதகை, வால்பாறையில் பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். தொடர்ந்து திண்டுக்கல், தேனி, தென்காசியில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் 2 நாட்கள் ரெட் அலர்ட்..! appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,KERALA ,KARNATAKA ,Chennai ,Meteorological Survey Centre ,Kowai, Neelgiri district ,Tamil Nadu, Kerala, Karnataka ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்