×

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு அளித்துள்ளது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. ஐஏஎஸ் கேடர் விதிகளின் படி ஐஏஎஸ் தலைமைச் செயலர் தரத்தில் ஒரு வருட காலத்திற்கு அரசின் கூடுதல் தலைமைச் செயலர், சிறப்பு முயற்சிகள் துறையின் தற்காலிகப் பதவியை உருவாக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் உயர் நிர்வாக தரத்தில் எரிசக்தித் துறையின் அரசாங்க முதன்மைச் செயலர் என்ற தற்காலிகப் பதவியை ஓராண்டு காலத்திற்கு உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளராக ரமேஷ் சந்த் மினா நியமனம் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசின் சிறப்பு புத்தாக்கத்துறை கூடுதல் தலைமை செயலாளராக ரமேஷ் சந்த் நியமனம் செய்துள்ளனர்.

வணிகவரித்துறை இணை ஆணையராக வீர் பிரதாப் சிங் நியமனம் செய்துள்ளனர். கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக விஜயா ராணி நியமிக்கப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் நல இயக்குநராக ஆசியா மரியம் நியமிக்கப்ட்டுள்ளார். பட்டு வளர்ப்புத்துறை இயக்குநராக பணியாற்றி வந்த விஜயா ராணி, கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் முதன்மை செயலாளர் மற்றும் தலைவர் நிர்வாக இயக்குனராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். பட்டு வளர்ப்புத்துறை இயக்குநராக சந்திரசேகர் சகாமுரி நியமனம் செய்துள்ளனர்.

தமிழ்நாடு சிறு தொழில் கழகத்தின் (டான்சி) முதன்மை செயலாளர், தலைவர், நிர்வாக இயக்குநராக ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளார். அடையாறு – கூவம் மறுசீரமைப்பு திட்ட சிறப்பு அலுவலராகவும் விஜயகுமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் (டான்செம்) நிர்வாக இயக்குநராக ஆர்.கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமையின் திட்ட அலுவராக ரஞ்சித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக சுரேஷ்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்துள்ளனர். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமையின் திட்ட அலுவலராக அலர்மேல்மங்கை நியமிக்கப்பட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு அளித்துள்ளது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Tamil Nadu ,Chennai ,Tamilnadu Government ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...