×

தமிழ்நாட்டில் நல்லாட்சி பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை: சென்னையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி நேற்று அளித்த பேட்டி: திமுக கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி. நாட்டின் மதச்சார்பின்மையை காப்பது முக்கிய கொள்கை. இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது. இந்தியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது. ஜனநாயக நாட்டில் கட்சி துவங்குவது, அரசியல் பேசுவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது.

இதற்கு நான் கருத்துச் சொல்ல ஒன்றும் இல்லை. விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணி குறித்து மிகத் தெளிவாக கூறி விட்டார். கூட்டணி தலைவர்கள் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்பதை எல்லாம் நாங்கள் கண்காணிக்க தேவையில்லை. தமிழ்நாட்டில் நல்லாட்சியைப் பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் நல்லாட்சி பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது: கனிமொழி எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tamil Nadu ,Kanimozhi ,Chennai ,DMK ,general secretary ,Kanimozhi MP ,India ,Democratic… ,
× RELATED தமிழகம் முழுவதும் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு