×

பந்தாவுக்காக இலை கட்சி திறந்த தண்ணீர் பந்தல்களின் பரிதாபத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியில் தன்னை நிலைநிறுத்தி மீண்டும் பெரிய பொறுப்பில் வர துடிக்கும் எக்ஸ் மினிஸ்டர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் இலைகட்சி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டம், கோடைக்கால நீர்,மோர் பந்தல் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கடலோர மாவட்ட தலைநகரில் வழக்கமாக நடக்குமாம். ஒவ்வொரு முறையும் நடக்கும் இந்த கூட்டங்களுக்கு குறைந்த அளவிலேயே இலை கட்சியின் தொண்டர்கள் வர்றாங்களாம். சில சமயம் நிர்வாகிகள் கூட வருவதில்லையாம். அண்ணே, வீட்டுல விசேஷம் அதுதான் நான் வரமுடியல. ஆனா, நம்ம ஆட்கள் ஒரு ஆயிரம் பேரை போகச் சொல்லியிருந்தேன் வந்தாங்களா என்று அப்பட்டமாக பொய் சொல்றாங்களாம். இதையெல்லாம் சேலம்காரர் தெரிந்து ைவத்திருந்தாலும் இன்னும் முழுவடிவில் நான் களத்தில் குதித்து மாவட்டம் தோறும் நிர்வாகிகள் பைலை எடுத்து இனிமேல்தான் பார்க்க போறேன். அதில் பிரச்னை வந்தால் அந்த மாவட்டத்தில் அத்தனை பேரும் மாற்றம்தான் என்று சொன்ன தகவல் திருச்சிகாரருக்கு போகலயாம். இந்த பிரச்னையில் இருந்து தன்னையும் தன் பதவியையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். இதுக்கு வசதியாக மே தினம் வந்துடுச்சு. இதை வைத்து ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி, சேலம்காரரை சந்ேதாஷத்தில் ஆழ்த்தனும்னு கால்குலேஷன் போட்டாராம். அதன்படி, மே தின பொதுக்கூட்டத்துக்கு ஆள் சேர்க்க, ‘வைட்டமின் ப’ கொடுத்து, எக்கசக்கமாக இலை கட்சியினர், பொதுமக்களையாவது கூட்டத்தை காட்டி தனது பலத்தை நிருபிக்க வேண்டும் என்று நினைத்தார் மாஜி அமைச்சர் ‘பெல்’. ஆட்களை மே தின பொதுக்கூட்டத்துக்கு லாரி, வேன், பஸ்களில் கூட்டம் கூட்டமாக அழைத்து வரும் பொறுப்பை, தனது ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் கரன்சியுடன் சேர்த்து கொடுத்தாராம். ஆனால், மே தின பொதுக்கூட்டத்துக்கு பெரிய அளவில் தொண்டர்களோ, கூலிக்கு அழைத்த பொதுமக்களோ வரவில்லையாம். இதில் கடும் அப்செட் ஆன மணியானவர், கூட இருந்தே குழிபறிக்கிறீங்களே… நான் கொடுத்த கரன்சி என்னாச்சு… கையில கட்சி பொறுப்பை வைச்சிருக்கீங்களே, அதை நிறைவேற்றும் வகையிலாவது ஆட்களை அழைத்து வருவதுதானே என்று தன் உச்ச கட்ட கோபத்தை காட்டினாராம். வரும் காலங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் குறைவான கூட்டம் வந்தாலும், அதை அதிகப்படுத்தி காண்பிக்க வேண்டும் என்று யோசனை செய்த மணியானவர், முருகன் குடிகொண்ட குறுகலான இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தினால் கூட்டம் குறைவாக இருந்தாலும் அதிகம் இருப்பது போன்று மேடையில் இருந்து பார்த்தாலும் தெரியும், போட்டோ எடுத்தாலும் தெரியும்னு மாஜி அமைச்சரான ‘பெல்’ ஐடியா சொன்னாராம். இதனால் இந்த குறுகலான இடத்தை தேர்வு செய்த மணியானவர் தன் ஐடியாவை ஆதரவாளர்களிடம் சொன்னாராம். அதை கேட்ட அவர்கள் மனசுக்குள் சிரித்து கொண்டே போயிட்டாங்களாம். அதுக்கு அர்த்தம் இந்த ஐடியா சரிப்பட்டு வராது என்பது தானாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ தாமரை கட்சியின் முக்கிய நபரோடு தொடர்பில் உள்ள பல்கலை அதிகாரியின் லீலைகள் பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரத்து பல்கலையின் தனி அதிகாரியாக இப்போது இருக்கும் அதிகாரம் படைத்தவர், இதற்கு முன்பு தொலைநிலை கல்வி துறையின் உயர் பொறுப்பில் இருந்தாராம். அப்போது, அவர் மீது ஏகத்துக்கும் புகார்கள் குவிந்ததாம். அதையெல்லாம், தாமரை கட்சி முக்கிய பிரமுகரிடம் உள்ள நெருங்கிய ெதாடர்பு மூலம் நொறுக்கி தள்ளிட்டாராம். தன்ைன ஒன்றும் செய்ய முடியாது தாமரையின் முக்கிய தலையின் நெருக்கம் என்னுடன் உள்ளது. அவரின் மூலம் நான் மீண்டும் ‘பவரான’ இடத்துக்கு வருவேன் என்கிறாராம். அவர் சொன்னபடியே இப்போது, தாமரை கட்சியின் முக்கிய விஐபி மூலமாகவே மீண்டும் பல்கலையில் முக்கிய பதவிகளில் அமர காய் நகர்த்தி வருகிறாராம். இவர், ஏற்கனவே தொலைநிலை கல்வியின் முக்கிய பொறுப்பில் இருந்தபோது, அப்போதைய துணைவேந்தர் நிறுத்தி வைத்த ‘பேக்டோர்’ மாணவர் சேர்க்கை மூலம் பல கோடி ரூபாய் கல்லா கட்டினாராம். அந்த புகார் இன்று வரை அப்படியே பெட்டியில் தூங்கிக் கொண்டு உள்ளதாம். இதனால் இவர் மீண்டும் தேர்வுத்துறை, பதிவாளர் போன்ற முக்கிய பொறுப்புகளில் அமர்ந்தால், நிர்வாகம் கடும் சீர்கேட்டை சந்திக்கும்னு பல்கலைக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்காம். அதையெல்லாம் காதில் வாங்காமல், தாமரை கட்சியின் தலைவரோடு நேரடியாக தொடர்பு வைத்து கொண்டு எல்லோரையும் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அலற விடுகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சம்மரில் காணாமல் போச்சாமே இலை கட்சியின் தண்ணீர் பந்தல்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயில் வெளுத்து வாங்கும் வெயிலூர் மாவட்டத்தில் கட்சிகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டது. இதில், போட்டி போட்ட குக்கர், இலை உள்ளிட்ட கட்சி சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் குடிப்பதற்கு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் உள்ளதாம். பானைகள், அண்டா, குண்டாக்கள் எல்லாம் தண்ணீர், மோர் மற்றும் பழச்சாறு இல்லாமல் காலியாக கிடக்கிறதாம். தண்ணீருக்காக வரும் பொதுமக்கள் காலியாக இருப்பதை பார்த்து ஏமாந்து போகிறார்களாம். சில இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பதற்காக கட்சி மேலிடம் தெரிந்து கொள்ளும் வகையில் சில போட்டோக்களை எடுத்துக் தலைமைக்கு அனுப்பி தங்கள் கடமையை முடித்து கொண்டார்களாம். தண்ணீர் பந்தலை கண்டுக்கவே இல்லையாம். அதை சில தொண்டர்கள் கேட்டபோது, என் வீட்டிலேயே குடிக்க தண்ணீர் இல்லை. தினமும் 200 முதல் 300 ரூபாய் வரை செலவு செய்றது யார்னு கேட்டார்களாம். அதனால்தான் தண்ணீர் பந்தல் இருக்கு.. ஆனால் தண்ணீர் இல்லை என்ற நிலையே வெயிலூர் மாவட்டத்தில் இருக்காம். சமீபத்தில் குக்கர் கட்சி சார்பில் பாடியான ஊரில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லையாம். போட்டோ எடுக்க மட்டும் இப்படி ஒரு தண்ணீர் பந்தல் தேவையா என ஓட்டுபோட்டவங்களே திட்டியபடி, அங்கிருந்து நகர்கிறார்கள். மொத்தத்துல இலை, குக்கர், ேதனிக்காரர் தரப்பு எல்லாமே போட்டோ போஸ் தண்ணீர் பந்தலை மட்டுமே திறக்கிறாங்க…’’ என்று சொன்னார் விக்கியானந்தா.

The post பந்தாவுக்காக இலை கட்சி திறந்த தண்ணீர் பந்தல்களின் பரிதாபத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf Party ,Bandha ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...