×

கோடை வெயிலை சமாளிக்க பஞ்சாப்பில் காலை 7 மணிக்கு அரசு அலுவலகம் திறப்பு: முதல்வர் அதிரடி உத்தரவு

சண்டிகர்: பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு அலுவலகங்களின் வேலை நேரம் குறித்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், ‘வரும் மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணி முதல் செயல்படத் தொடங்கும். தற்போது காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், வரும் மே 2 முதல் ஜூலை 15ம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். கோடை வெயிலை கருத்தில் கொண்டு, அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்கள் பணிகளை எளிதாக செய்து முடிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் இத்திட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

The post கோடை வெயிலை சமாளிக்க பஞ்சாப்பில் காலை 7 மணிக்கு அரசு அலுவலகம் திறப்பு: முதல்வர் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Punjab ,Chief Minister ,Chandigarh ,Bhagwant Mann ,Aam Aadmi government ,Dinakaran ,
× RELATED சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: கெஜ்ரிவால் காட்டம்