×
Saravana Stores

மாற்று திறனாளிகளுக்கான நிறுவனங்கள் புவி குறியீடு: இம்மாத இறுதிக்குள் நிறைவு

புதுடெல்லி: பிரதமர் கதி சக்தி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்களை புவிசார் குறியிடும் (ஜியோ டேக்கிங்) பணி இம்மாத இறுதிக்குள் முடியும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் விவகார துறையின் இணை செயலாளர் ராஜிவ் யாதவ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து நிறுவனங்களையும் ஜியோ டேக் செய்யும் பணி கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களையும் அறிய முடியும். இந்த பணி ஜூன் 30ம் தேதிக்குள் நிறைவடைய உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் ஜியோ டேக் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 450 தீனதயாள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத் திட்டம் மற்றும் 13 தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் பிரெய்லி அச்சகங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன’’ என்றார். இதே போல நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கும் புவிசார் குறியிடும் பணி நடந்து வருகிறது. 14 லட்சம் அங்கான்வாடி மையங்களில் 10 லட்சம் மையங்கள் புவிசார் குறியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post மாற்று திறனாளிகளுக்கான நிறுவனங்கள் புவி குறியீடு: இம்மாத இறுதிக்குள் நிறைவு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Gathi Shakti Yojana ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் விவகாரம் அனைத்து...