×

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்த: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!!

சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மாணவர்களின் அடிப்படை திறன்கனை மேம்படுத்தும் நோக்கில் “திறன்கள்” என்ற திட்டத்தினை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வருகிறது.

மாணவர்களின் அடிப்படை திறன்களில் முன்னேற்றம் காணப்பட்டபோதிலும், தேசிய அளவில் நடைபெறும் NAS(என்.ஏ.எஸ்) ACER (ஏசி.ஈ.ஆர்,) போன்ற திறன் அளவீட்டு ஆய்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்புக்கேற்ற மொழித் திறன்கனை அடைவதில் குறைபாடு கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது. ஆகவே மாணவர்களின் ஆங்கில அடிப்படை மொழித் திறன்களை மேம்படுத்தும் வகையில் ஒரு கூடுதல் முயற்சியானது அவசியமாகிறது. இதன் மூலம் மாணவர்கள் அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை எளிதாக பெரும்வகையில் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் மொழிப்பாட ஆசிரியர்கள், குறிப்பாக ஆங்கில மொழியை கற்பிக்கும் ஆசிரியர்களில் பலர் தங்களது வகுப்பறை சூழல், பணி செய்யும் பகுதியின் சமூக சூழலை கருத்தில் கொண்டு மாணவர்களின் அடிப்பனை மொழித் திறன்கனை வள்ர்க்கும் வகையில் கற்பித்தல் நுட்பங்களை தாங்களே உருவாக்கி வகுப்பறைகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். இவ்வாறான பல சுய முன்னெடுப்புகள் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள் தன்னாார்வத்தோடு கற்பித்தல் வழிமுறைகளை உருவாக்குபவர்களாகவும், பிற ஆசிரியர்கைாள் உருவாக்கப்பட்ட கற்பித்தல் நுட்பங்களை தங்களது வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துபவராகவும் உள்ளபோதிலும் இவ்வாறான முயற்சிகள், அவ்வாசிரியர்கள் பணியாற்றக்கூடிய சில பள்ளிகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. இத்தகைய சிறப்பான செயல்பாடுகள், அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கும்படி செய்திட வேண்டியது அவசியமாகிறது.

பல மாவட்டங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சிகளை, அதாவது, அவர்களது அணுகுமுறைகள், வழிமுறைகள் மற்றும் கற்பித்தல் நுட்பங்களை (Approach, Methodology and Techniques) ஒருங்கிணைத்து தொகுத்து, அவற்றை மொழி வள வங்கியாக மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு, இம்மொழி வள வங்கி மூலம் ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் வழிமுறைகளை பிறருக்கு வழங்கவும் அவற்றைப் பெற விழைவோர் அவற்றினைப் பெற்றிடவும் முடியும்.

இதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் மொழித் திறன்களை மேம்படுத்தும் ஒரு புதிய முன்னெடுப்பாக “Level Up” என்ற தன்னார்வ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கமானது, அரசுப் பள்ளிகளில் குறிப்பாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஆங்கில மொழி வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்பனைத் திறன்களை மாணவர்கள் எளிதாக கற்றுக் கொள்ளும் வனகயில் ஏற்கனவே ஆசிரியர்களால் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிற செயல்பாடுகளை கொண்ட “மொழி வள வங்கி” ஒன்னற உருவாக்குவதாகும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இவ்வகையான முயற்சிகனை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் ஆசிரியர்கனை கொண்ட ஒரு புலனாய்க் குழு (WhatsApp group) (வாட்ஸ் அப் குரூப்) தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 2025 – 2026 ஆம் கல்வியாண்டில், ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உள்ள ஏழு மாத காலத்திற்கு, ஒவ்வொரு மாதத்திற்கும் மாணவர்கள் அடைய வேண்டிய குறைந்தபட்ச மொழித் திறன் இலக்குகள் நிர்ணயிக்கப்பட உள்ளன.

மாவட்டம் தோறும் (மாவட்டத்திற்கு நான்கு அல்லது ஐந்து ஆசிரியர்கள் வீதம்) தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் “Level Up” (லெவல் அப் ) புலனாய்க்குழுவில் இனணக்கப்பட்டுள்ளனர். இவ்வாசிரியர்களுக்கான முதல் வழிகாட்டி இணைய வழி கூட்டம் 02.05.2025 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாணவர்களின் ஆங்கில அடிப்பனைத் திறன்கள் மேம்படுத்துவது குறித்தும், சிறப்பாக தங்களது திறன்வளர் நுட்பங்களை கையாளும் ஆசிரியர்களின் அனுபவங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் ஆங்கில அடிப்பனைத் திறன்கள் அடைவு குறித்த மாதவாரியான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் பொருட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் திட்ட் அலுவலர்கள், தங்கள் மாவட்டங்களில் ஆங்கில மொழி கற்பித்தலில் புதுமையான முயற்சிகள் மேற்கொண்டு சிறப்பான கற்றல் விளைவுகளை ஏற்படுத்தியுள்ள ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களது முயற்சிகளை பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கவனத்திற்கு கொணர்ந்து, இந்த “Level Up” (லெவல் அப் ) என்ற தன்னாார்வ செயல்பாட்டு திட்டத்தில் அவ்வாசிரியர்களை இணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், புலனக்குழுவில் ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் வழிமுறைகள் தொடர்பான பதிவுகளை பகிரும் வகையில் அப்புலனாய்க்குழுவானது அமைக்கப்படும்.. ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் நேரடி கண்காணிப்பில், பள்ளிகளில் “Level Up” (லெவல் அப் ) என்ற தன்னார்வ திட்ட செயலாக்கத்தினால் மாணவர்கள் பெற்ற அடிப்படை ஆங்கில மொழித்திறன் அடைவு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்த: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of School Education ,Tamil Nadu School Education Department ,School Education Department of the Government of Tamil Nadu ,
× RELATED கோயில்களில் முதல் மரியாதை என்பது...