×

செய்யாறு அருகே அனப்பத்தூர் கூட்டுச் சாலையில் கூடுதலாக பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை

செய்யாறு : செய்யாறு அருகே அனப்பத்தூர், ஏரிக்கோடி, திரும்பூண்டி, அரசூர், கீழ்கொளத்தூர், வட சேந்தமங்கலம் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் 200க்கு மேற்பட்ட மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்கின்றனர்.

விபத்து ஏற்படும் முன் உரிய ஆய்வு செய்து செய்யாறு அருகே அனப்பத்தூர் கூட்டுச்சாலையில் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து செய்யாறு அரசு போக்குவரத்து கிளை மேலாளர் சோலையப்பனிடம் கேட்டபோது, ‘பள்ளி செல்லும் நேரங்களில் 4 பஸ்கள் இயக்கி வருகிறோம். மேலும் கள ஆய்வு செய்து கூடுதல் பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post செய்யாறு அருகே அனப்பத்தூர் கூட்டுச் சாலையில் கூடுதலாக பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anapathur Joint Road ,Cheyyar ,Anapathur ,Erikodi ,Thirumundi ,Arasur ,Kilkolathur ,Vada Senthamangalam ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...