- ரஜினிகாந்த் அறக்கட்டளை
- முகநூல்
- சென்னை
- டிஎஸ்
- சிவராமகிருஷ்ணன்
- கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் பிரதான சாலை
- போலீஸ் கமிஷனர் அலுவலகம்
- வேப்பேரி, சென்னை
- தின மலர்
சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த டி.எஸ்.சிவராமகிருஷ்ணன் என்பவர் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் ‘ரஜினிகாந்த் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்து வருகிறேன். இந்த அறக்கட்டளை மூலம் விளிம்பு நிலையில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கு இலவசமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி அளிப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எங்கள் அறக்கட்டளையின் முகவரியை வழக்கறிஞர் சத்தியகுமார் மேற்பார்வை செய்து வருகிறார்.
இந்நிலையில், குறிப்பிட்ட 2 செல்போன் எண்கள் மூலம் போலியாக முகநூல் பக்கம் தொடங்கி அதன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படத்தை வைத்து, ‘ரஜினிகாந்த் பவுண்டேஷன்’ மூலம் 200 நபர்களை அதிர்ஷ்ட குலுக்கலில் தேர்வு செய்து ரூ.2 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்குவதாக குறிபிட்டு பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து வருகின்றனர். இதன்மூலம் எங்கள் அறக்கட்டளைக்கும் நடிகர் ரஜினிகாந்த் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே மோசடி நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அந்த புகாரின் மீது உடனே நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவுக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி நபர்கள் பயன்படுத்திய முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
The post போலி முகநூல் பக்கம் தொடங்கி ‘ரஜினிகாந்த் பவுண்டேஷன்’ பெயரில் மக்களிடம் பல லட்சம் பணம் வசூல்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அறக்கட்டளை அறங்காவலர் புகார் appeared first on Dinakaran.