×

இலங்கை கடற்படை கைது செய்த 10 நாகை மீனவர்கள் விடுதலை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார்(44). இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 3ம் தேதி நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்வகுமார், ராஜா, பொண்ணுராஜா, இளையராஜா, கணபதி, சாய் சிவா, முகேஷ், அரவிந்த், அழகு, வேலு ஆகிய 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கடந்த 7ம் தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 10 பேரை சிறை பிடித்து விசைப்படகை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 10 பேரும் திரிகோணமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 21ம் தேதி வரை (நேற்று) நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 10 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் படகு விடுவிக்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டு விரைவில் நாடு திரும்பவுள்ளனர்.

The post இலங்கை கடற்படை கைது செய்த 10 நாகை மீனவர்கள் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Nagapattinam ,Senthilkumar ,Akkaraipet, Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகை மீனவர்கள் 10 பேர் கொலை வழக்கில்...