சென்னை: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களின் 33 படகுகளுக்கு நிவாரணம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மீனவர் நலனில் அக்கரை கொண்டுள்ள இவ்வரசானது, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் விடுபட்டு போன 21 விசைப் படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5,00,000 மற்றும் 12 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,50,000 ஆக மொத்தம் 33 படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.23 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கி அரசாணை (ப)எண். 523, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்(மீன்6)துறை, நாள் 14.08.2023-ல் ஆணைகள் வெளியிடப்பட்டது.
The post இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் appeared first on Dinakaran.
