×

ஸ்பெல்லிங் பீ போட்டி இந்திய வம்சாவளி சிறுவன் முதல் பரிசு

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சவாளியை சேர்ந்த 14வயது சிறுவன் முதல் பரிசை வென்றுள்ளார். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்பெல்லிங் பீ என்ற கடினமான வார்த்தை உச்சரிப்பு போட்டி நடைபெறுவது வழக்கமாகும். 95வது தேசிய அளவிலான ஸ்பெல்லிங் பீ என்ற இந்த போட்டி இந்த வாரம் நடைபெற்றது. செவ்வாயன்று தொடங்கிய முதல் கட்ட போட்டியில் சுமார் 1.1கோடி போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களில் இறுதிப்போட்டிக்கு 11 பேர் தேர்வானார்கள். நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 14வயது சிறுவன் தேவ் ஷா, போட்டியில் கொடுக்கப்பட்ட கடினமான வார்த்தையை சரியாக உச்சரித்து முதல் பரிசை வென்றார். பரிசு தொகையாக ரூ.41லட்சம் வெற்றி பெற்ற தேவ் ஷாவிற்கு வழங்கப்பட்டது.

The post ஸ்பெல்லிங் பீ போட்டி இந்திய வம்சாவளி சிறுவன் முதல் பரிசு appeared first on Dinakaran.

Tags : Spelling Bee Competition ,Washington ,America ,America… ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...