×

உலக மருத்துவர் தினத்தையொட்டி சிறப்பு சித்த மருத்துவ முகாம்

திருப்போரூர்: உலக மருத்துவர் தினத்தையொட்டி திருப்போரூர் ஒன்றியம், சிறுங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவின் கீழ் சிறுங்குன்றம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஜிக்கி விநாயகம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் கல்யாணி ராமகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவர் வானதி நாச்சியார் வரவேற்றார். திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன், மருத்துவமனை பெயர் பலகையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் மூலிகை தேநீர் வழங்கினார்.முன்னதாக, சிக்‌ஷா பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. திருப்போரூர் மற்றும் மாமல்லபுரம் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டு, மருத்துவர் தினத்தையொட்டி மருத்துவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் தொழிலதிபர்கள் ரவிச்சந்திரன், ரவிக்குமார், கரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்(பொறுப்பு) தனசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post உலக மருத்துவர் தினத்தையொட்டி சிறப்பு சித்த மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Siddha Medical Camp ,World Doctors' Day ,Thiruporur ,Sirungunram ,Siddha Medical Unit ,Sirungunram Primary Health Center ,Thiruporur Union ,Panchayat ,President ,Jikki Vinayagam ,Union Committee… ,Special Siddha ,Medical Camp ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...