×

இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி : இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் அதிக வெயில் காரணமாக வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்த நிலையில், இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை மே 13-ம் தேதி வாக்கில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது. வழக்கமாக அந்தமான் பகுதியில் மே இறுதியில் தொடங்கும் பருவமழை 2 வாரம் முன்னதாகவே தொடங்குகிறது. இந்தாண்டு 10 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தது. இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை 5% கூடுதலாக பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் கணித்துள்ளது.

வெயிலின் தாக்கம் குறையும் – பிரதீப் ஜான்

முன்கூட்டியே பருவ மழை தொடங்குவதால் வெயிலின் தாக்கம் குறையும் என தனியார் வானிலை மைய தலைவர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். இந்தாண்டு 10 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்தாண்டு மே மாதத்தில் வெயில் தாக்கம் பெரிய அளவில் இருக்காது.

The post இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : India Meteorological Department ,Delhi ,
× RELATED இந்தியா முழுவதும் தங்கள் அட்டவணையில்...