×

உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

மும்பை: உலககோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கிடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய செய்ய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்காவின் க்ளாசென் 109, ஹென்ட்ரிக்ஸ் 85, ஜேன்சன் 75, வான் டர் டஸ்ஸென் 60 ரன்கள் விளாசினர். இங்கிலாந்தின் டாப்லே 3, அட்கின்சன் மற்றும் ஆதில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 22 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வுட் 43*, அட்கின்ஸன் 35, ஹாரி ப்ரூக் 17 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்ஸி 3. என்கிடி, ஜேன்சன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு கிடைக்கும் 3-வது வெற்றி இதுவாகும்.

இன்றையப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் இந்த உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து தனது 3-வது தோல்வியை சந்தித்துள்ளது. தென்னாப்பிரிக்கா புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 9-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி! appeared first on Dinakaran.

Tags : Cricket World Cup ,South Africa ,England ,Mumbai ,World Cup ,World Cup Cricket ,Dinakaran ,
× RELATED ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்...