×

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

 

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். அந்த வகையில், நிதி ஆயோக்கின் இந்த ஆண்டுக்கான (2025) கூட்டம் நாளை (24ம் தேதி) காலை 9.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.

இதற்கான அழைப்பு கடிதம் முறையாக ஒன்றிய அரசு சார்பில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு பங்கேற்கிறார். அதன்படி, நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக இன்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 12.50 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்றடைந்தது. டெல்லி சென்ற முதல்வருக்கு, தமிழக எம்பிக்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு முதல்வர் சென்றார். டெல்லி சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

 

The post டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Congress ,Senior Leader ,Sonia Gandhi ,Rahul Gandhi ,Chief Minister ,MLA K. Stalin ,Modi ,Union Government ,Nidi Aayog ,
× RELATED வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு...