×

தமிழ்நாட்டை சேர்ந்த பொறியாளர் உட்பட 177 பேருக்கு சிங்கப்பூர் குடியுரிமை சான்றிதழ்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் உட்பட 177 பேருக்கு அந்த நாட்டின் குடியுரிமை நேற்று வழங்கப்பட்டது.சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் குடியுரிமை விழா நடத்தப்படும். அப்போது அந்த நாட்டில் வந்து குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.இந்த நிலையில்,நேற்று நடந்த விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த பொறியாளர் சுதன் வின்சென்ட் உள்பட 177 பேருக்கு சிங்கப்பூரின் குடியுரிமை சான்றிதழை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர் பாலகிருஷ்ணன்,‘‘ ஒவ்வொருவருக்கும் தனித்துவம்வாய்ந்த திறமைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி நமது சமூகத்துக்குப் பங்களிக்க வழிவகைகளை ஆராய வேண்டும்” என்றார். கடந்த ஆண்டு 23,500 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது. பொறியாளரான சுதன் வின்சென்ட்(49) கடந்த 2008ம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தார். சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. சிறிது காலம் வேலை செய்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்ப அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் சிங்கப்பூரின் ஒழுங்குமுறை, தரமான போக்குவரத்துச் சேவை ஆகியவை அவரைப் பிரமிக்க வைத்தன. இதன் காரணமாக சிங்கப்பூர் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பித்தார். அவர் கூறுகையில் ‘‘சிங்கப்பூர் குடியுரிமை கிடைத்திருப்பதன் மூலம் சிங்கப்பூரில், குடும்பமாக வாழ்ந்து எங்கள் கனவை நனவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார்.

The post தமிழ்நாட்டை சேர்ந்த பொறியாளர் உட்பட 177 பேருக்கு சிங்கப்பூர் குடியுரிமை சான்றிதழ் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Singapore ,Tamilnadu ,
× RELATED உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய...