×

நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு `சிவகங்கை’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் சேவை இயக்கப்படுகிறது. தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடம் என சென்னை மண்டல ஆய்வு நிலையம் எச்சரிக்கை காரணமாக பயணிகள் கப்பல் சேவை கடந்த 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று (18ம் தேதி) காலை முதல் வழக்கம் போல் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதில் 95 பயணிகள் பயணம் செய்தனர். நாகையில் இருந்து புறப்பட்ட கப்பலில் பயணம் செய்தவர்களை உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர்.

 

The post நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Sri Lanka ,Kankesanthurai, Sri Lanka ,Chennai Regional Meteorological Centre ,Tamil Nadu… ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு