×

விருப்ப பாலியல் உறவுக்கான வயது வரம்பில் மாற்றம்? அரசின் கருத்தை கேட்கும் சட்ட ஆணையம்

புதுடெல்லி: உடலுறவுக்கான ஒப்புதல் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் வயதில் மாற்றம் செய்வது குறித்து ஒன்றிய அரசின் கருத்தை சட்ட ஆணையம் கேட்டுள்ளது. இந்தியாவில் 18 வயதுக்குக் கீழான சிறார்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. 18 வயதுக்குட்டபவர்கள் விருப்பப்பட்டு பாலியல் உறவில் ஈடுபட்டாலும் சட்டப்படி அது பலாத்காரமாகவே கருதப்படுகிறது. ஆனால், 17 வயது சிறுமியின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து பாலியல் உறவில் ஈடுபட்ட அவரது காதலனை டெல்லி உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில், விருப்ப பாலியல் உறவுக்கான வயது வரம்பை மாற்றியமைப்பது குறித்து 22வது சட்டக் கமிஷன் ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சக அதிகாரிகளுடன் சட்டக் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இது பற்றி ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறுகையில், சட்டக் கமிஷன் அதிகாரிகள் சில தரவுகளை கேட்டனர் என்றனர். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசிடம் தனது பரிந்துரைகளை சட்டக் கமிஷன் சமர்ப்பிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே ஜப்பான் நாட்டில் விருப்ப பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது 13ல் இருந்து 16ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இது தொடர்பான சட்ட மசோதா ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

The post விருப்ப பாலியல் உறவுக்கான வயது வரம்பில் மாற்றம்? அரசின் கருத்தை கேட்கும் சட்ட ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Legal Commission ,New Delhi ,Law Commission ,Government of the Union ,Dinakaran ,
× RELATED கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு...