×

தொடர் விடுமுறையால் கூட்டம் அலைமோதல் திருப்பதியில் 20 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 2 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை

திருமலை: தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், சுமார் 2 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். தீபாவளி பண்டிகை மற்றும் வாரவிடுமுறை என தொடர்ந்து விடுமுறை என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி நேற்றுமுன்தினம் 67,785 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27,753 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.2.38 கோடி காணிக்கை செலுத்தினர். தொடர் விடுமுறை மற்றும் சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் வைகுண்டம் கியூ காம்பளக்ஸ் அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள ஏடிஜிஎச் கட்டிடம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

The post தொடர் விடுமுறையால் கூட்டம் அலைமோதல் திருப்பதியில் 20 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 2 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Swami ,Tirumala ,Tirupati Eyumalayan Temple ,Diwali ,Seven Malayan Temple ,Tirupati Swami Darshan ,
× RELATED 25 நிமிடத்தில் 1.40 லட்சம் பேர் முன்பதிவு...