சென்னை: செந்தில் பாலாஜி சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 15ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் சிறப்பு மருத்துவ குழு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதற்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு உடல்நலையில் சற்று முன்னேற்றம் ஏற்படவே அவர் இன்று காலை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உடல்நல குறைவு காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக சென்னை ஓமத்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சிகிச்சை முடிந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
The post செந்தில் பாலாஜி சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் புழல் சிறையில் அடைப்பு! appeared first on Dinakaran.