×

பள்ளி கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக பள்ளி கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டடம் இருப்பின், ஆட்சியரிடம் அனுமதி பெற்று உடனே இடித்து அகற்ற வேண்டும். விடுமுறை நாட்களில் நீர்நிலைகளில் மாணவர்கள் குளிக்க அனுமதிக்கக் கூடாது என பெற்றோர்களை அறிவுறுத்த வேண்டும். தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச் சுவரின் உறுதித் தன்மையை கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

The post பள்ளி கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED மதுரவாயலில் புதிதாக கட்டப்பட்டு...