×

சாணார்பட்டி அருகே கிணற்றில் தவித்த காட்டுமாடுகள் மீட்பு: தண்ணீர் தேடி வந்த போது தவறி விழுந்தது

கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே கரந்தமலை அடிவாரத்தில் உள்ளது சக்கிலியன் கொடை கிராமம். கரந்தமலை பகுதியில் இருந்து காட்டுமாடுகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் தேடி 5 காட்டுமாடுகள் ஊருக்குள் வந்தன. அப்போது கரந்தமலை அடிவாரத்தில் வீரன் என்பவருக்கு சொந்தமான தோட்ட கிணற்றில் தண்ணீர் குடிக்க இறங்கியது. அப்போது தண்ணீர் இல்லாததால் 5 காட்டுமாடுகளும் கிணற்றிற்குள் தவறி விழுந்தன.

நேற்று காலை தோட்டத்திற்கு வந்த வீரன், காட்டுமாடுகள் கிணற்றில் விழுந்திருப்பதை கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து காட்டு மாடுகள் மேலே ஏறி வர ஏதுவாக கிணற்றின் ஒருபக்க மண்ணை சரித்து விட்டனர். அதன்பின் 5 காட்டுமாடுகளும் அதன் மீது ஏறி மேலே வந்து காட்டுக்குள் சென்றன. கிணற்றில் தவறி விழுந்ததில் 2 காட்டு மாடுகளின் உடலில் காயங்கள் இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

The post சாணார்பட்டி அருகே கிணற்றில் தவித்த காட்டுமாடுகள் மீட்பு: தண்ணீர் தேடி வந்த போது தவறி விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Chanarpatti ,Gopalpatti ,Sakhilian Kodai ,Karantamalai ,Karandamalai ,Dinakaran ,
× RELATED மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ...