×

ரூ.2 ஆயிரம் நோட்டு வாபஸ் மூலம் நாட்டில் பொருளாதார நெருக்கடி குழப்பம் ஏற்படுத்த மோடி முயற்சி: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூரில் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசு கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 2016ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை யால்மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டை வாபஸ் பெறுவதால் கருப்பு பணம் ஒழியுமா? கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தங்கமாகவோ, வைரமாகவோ, நிலமாகவோ, சொத்துக்களாக, தொழிற்சாலைகளாகத்தான் வைத்திருப்பார்கள். நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியையும், குழப்பத்தையும் உண்டாக்க மோடி முயல்கிறார் என்றார்.

The post ரூ.2 ஆயிரம் நோட்டு வாபஸ் மூலம் நாட்டில் பொருளாதார நெருக்கடி குழப்பம் ஏற்படுத்த மோடி முயற்சி: பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Balakrishnan ,Modi ,Thiruvarur ,State Secretary of ,Communist Party ,Marxist ,K. Balakrishnan ,Union government ,
× RELATED கன்னியாகுமரியில் பிரதமர் மோடி...