×

குன்னூர் – உதகை இடையே சாலையோரம் வளர்ந்த அபாயகர மரங்களை அகற்ற வேண்டும்

*வாகன ஓட்டிகள் கோரிக்கை

குன்னூர் : குன்னூர் – உதகை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் வளர்ந்த அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சமூக காடுகள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளிலும் கற்பூரம், சீகை, பைன் மற்றும் சாம்பிராணி போன்ற மரக்கன்றுகளை வனத்துறையினர் நடவு செய்தனர். குறிப்பாக, வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள காலி நிலங்கள் இந்த மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டது.

தற்போது இவைகள் நெடுநெடுவென வளர்ந்து நிற்கின்றன. இந்த மரங்களால், ஆண்டு தோறும் பருவமழையின் போது பல்வேறு விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
குறிப்பாக, பருவமழை காலங்களில் இந்த மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து பாதிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், குன்னூரில் இருந்து உதகை செல்லும் சாலையில் அருவங்காடு பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையோரங்களில் ஏராளமான கற்பூர மரங்கள் உள்ளன. இவைகளில் பெரும்பாலான மரங்கள் சாலையில் சாய்ந்து நிற்கின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஜெகதளா கிடங்கு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சஜீவன் கூறுகையில், ‘‘காணிக்கராஜ் நகர் முதல் பாய்ஸ்கம்பெனி வரை ஏராளமான கற்பூர மரங்கள் சாலையோரங்களில் அபாயகரமான முறையில் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதற்கிடையே ஆபத்து ஏற்படக்கூடிய இடங்களை அறிந்து, மரத்தை அகற்றாததால் கடந்த 2-ம் தேதி ராணுவ மையத்தில் நுழைவுவாயிலின் முன் காரில் மரம் விழுந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

அதனால் இவ்வாறு உள்ள அபாயகரமான மரங்களால், வாகனங்களில் விபத்து ஏற்படவுள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய இந்த சாலையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் அபாயகர மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார்.

The post குன்னூர் – உதகை இடையே சாலையோரம் வளர்ந்த அபாயகர மரங்களை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Gunnar ,Kunnure-Udagai National Highway ,Nilgiri district ,Khunur ,Kushai ,Dinakaran ,
× RELATED குன்னூரில் பரபரப்பு; வீட்டின் முன்...