×

உத்திரமேரூரில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையின் குறுக்கே அமைத்துள்ள தடுப்பு சுவரை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உத்திரமேரூர் மானாம்பதி இடையேயான இருவழிச் சாலையில் பேரூராட்சி அலுவலகம் அருகே துவங்கி நங்கையர்குளம் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை இருபுறமும் நடைப்பாதைக்காக போவர் பிளாக் கற்கள் பதிப்பு மற்றும் கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் அங்காளம்மன் கோயில் அருகே சுமார் 250 மீட்டர் தொலைவிற்கு மட்டும் இருவழிசாலைக்கு நடுவே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.

இருவழிச்சாலையின் குறுகே தடுப்பு சுவர் அமைத்ததால் சாலை குறுகலாக காணப்படுகிறது. மேலும், போவர் பிளாக் கற்கள் பதித்த பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தயக்கம் காட்டி சாலையில் செல்லும்போது தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. இந்த தடுப்பு சுவர் அமைத்து சுமார் 3 மாத காலங்கள் மட்டுமே ஆனநிலையில், இதுவரை 12க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது. இதில், சில உயிரிழப்புகளும், பலர் படுகாயமும் அடைந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சம்மந்தபட்ட துறையினருக்கு உத்தரவிட்டு சாலையின் குறுக்கே அமைந்துள்ள விபத்தை ஏற்படுத்தும் தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உத்திரமேரூரில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையின் குறுக்கே அமைத்துள்ள தடுப்பு சுவரை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Uttaramerur ,Uttara Merur ,Dinakaran ,
× RELATED இணையவழியில் ஆவணங்கள் பெற பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்