×

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி -லக்னோ இன்று மோதல்

பெங்களூரு: 16வது சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 15வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதுகின்றன. முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய பெங்களூரு, 2வது போட்டியில் கொல்கத்தாவிடம் படுதோல்வியை சந்தித்தது. இன்று சொந்த மைதானத்தில் மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கேப்டன் டூ பிளெசிஸ், விராட் கோஹ்லியை தான் பேட்டிங்கில் பெரிதும் நம்பி உள்ளது. மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் தடுமாறி வருகின்றனர். ஹசரங்கா வருகையால் பிரேஸ்வெல்லுக்கு இடம் கிடைக்காது. பவுலிங்கில் டேவிட் வில்லி, சிராஜ், ஹர்சல்பட்டேல் தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்வர்.

மறுபுறம் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ, 3 போட்டியில் டெல்லி, ஐதராபாத்துக்கு எதிராக வெற்றி , சென்னைக்கு எதிராக தோல்வி என 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று முதல் இடத்திற்கு முன்னேற முனைப்பு காட்டும். பேட்டிங்கில் கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், தீபக் கூடா ஆகியோருடன் டிகாக்கும் ஆட வாய்ப்பு உள்ளது. க்ருணல் பாண்டியா ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறார். பவுலிங்கில் உனட்கட், மார்க் வூட், ரவி பிஷ்னோய், யாஷ் தாகூர் வலு சேர்க்கின்றனர். கடந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 2 போட்டியிலும் பெங்களூரு அணியே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி -லக்னோ இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : RCB ,Lucknow ,Bengaluru Chinnaswamy Stadium ,Bengaluru ,IPL ,Dinakaran ,
× RELATED லக்னோவில் ஐபோனுக்காக டெலிவரி ஊழியர்...