×

ரேஷன் அரிசி கடத்தல் தொழுநோய் இல்லத்திற்கு ரூ.12,500 செலுத்த ஐகோர்ட் உத்தரவு

மதுரை: ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் மதுரை உணவுப்பொருள் குற்றத் தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தனது வாகனத்தை விடுவிக்கக் ேகாரி சதீஷ்குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘இடைக்காலமாக மனுதாரர் வாகனத்தை விடுவிக்க வேண்டும். இதற்காக மனுதாரர் ரூ.5 ஆயிரத்தை ஒய்.புதுப்பட்டியில் உள்ள அரசு தொழுநோய் இல்லத்திற்கு திரும்ப பெறப்படாத வகையில் செலுத்த வேண்டும். இந்த இடைக்கால உத்தரவு வாகனம் பறிமுதல் நடவடிக்கைக்கு உட்படாது’’ என உத்தரவிட்டார். இதுபோன்று புதுக்கோட்டையைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மனுவை விசாரித்த நீதிபதி, வாகனத்தை இடைக்காலமாக விடுவிக்க மனுதாரர் ஒய்.புதுப்பட்டி அரசு தொழுநோய் இல்லத்திற்கு ரூ.7500 வழங்க உத்தரவிட்டார்.

The post ரேஷன் அரிசி கடத்தல் தொழுநோய் இல்லத்திற்கு ரூ.12,500 செலுத்த ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Eicort ,Madurai ,Madurai Foodware Prevention Division ,iCort ,Rice Traffic Leprosy House ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை