×

ராமதாஸ், அன்புமணி ஒன்றிணைய வேண்டும்: நயினார் நாகேந்திரன் பேட்டி


நெல்லை: பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஒன்றிணைய வேண்டும் என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கூறினார். நெல்லையில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லையப்பர் கோயிலில் தற்போது யானை இல்லை. கோயிலுக்கு யானை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக உ.பி. மாநிலத்தில் இரு யானை குட்டிகள் உள்ளன. மத்திய, மாநில அரசு விதிகளுக்கு உட்பட்டு யானை வாங்க பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒன்றிணைய வேண்டும். பாஜக கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும். அன்புமணி, ராமதாஸ் இருவருக்கும் இடையே உள்ள பிரச்னையில் பின்னணியில் பாஜக இல்லை. மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் திட்டம் பாஜக ஆட்சி அமையும்போது கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ராமதாஸ், அன்புமணி ஒன்றிணைய வேண்டும்: நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : RAMADAS ,ANBUMANI ,NAINAR NAGENDRAN ,Bahia ,president ,Nayinar Nagendran ,MLA ,Bamaka ,Ramdas ,Nellai ,Nellaiapar Temple ,
× RELATED கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி;...