×

மாநிலங்களவை வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு: மநீம செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் மநீம வேட்பாளராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், வருகிற ஜூன் 19ம் தேதி நடைபெற இருக்கும் 6 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, கட்சி தலைவர் கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.

மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல்ஹாசனுக்கு தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

The post மாநிலங்களவை வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு: மநீம செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Rajya Sabha ,Chennai ,Makkal Needhi Maiam ,Dravida Munnetra Kazhagam ,2024 parliamentary general elections… ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்