×

ராஜபாளையம் அருகே மீன்கொத்தி பாறை அருவியில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் சாவு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அருவி தண்ணீரில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆவரம்பட்டி தெருவை சேர்ந்தவர் குருசாமி மகன் சக்தி மகேஸ்வரன் (16). பிளஸ் 1 படித்து வந்தார். இவர் தனது உறவினருடன் ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றுக்கு அருகே உள்ள மீன்கொத்தி பாறை அருவியில் நேற்று குளிக்க சென்றார். இருவருக்குமே நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று சக்தி மகேஸ்வரன் கால் வழுக்கி ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினார். உறவினருக்கும் நீச்சல் தெரியாததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. எனவே உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 12 அடி ஆழத்தில் மூழ்கி கிடந்த சக்தி மகேஸ்வரனின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராஜபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராஜபாளையம் அருகே மீன்கொத்தி பாறை அருவியில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Meenkothi rock waterfall ,Rajapalayam ,Kuruswamy ,Sakthi Maheswaran ,Avarampatti street ,Rajapalayam, Vridhunagar district ,Rakachi Amman ,Meenkothi ,rock waterfall ,
× RELATED பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்