×
Saravana Stores

தமிழ்நாட்டில் 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று ஒரிசா கடற்கரையை ஒட்டிய சில்கா ஏரி அருகே மையம் கொண்டது. இது ஒரிசா மற்றும் சத்திஸ்கர் அருகில் இன்று குறைந்த காற்றழத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 26ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,West Bay of Bengal ,Orissa ,North Andhra ,Chilka Lake ,Chhattisgarh ,
× RELATED ஆதரவற்ற விதவை சான்று பெற துணையின்றி...