சென்னை: ரயில்வே துறையில் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் கட்டணம் இருக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியதாவது ,ரயில்வே துறையின் சமீபத்திய கட்டண உயர்வு ரயில் பிரயாணம் செய்வோரை கவலைக்குள்ளாகியுள்ளது. பொதுமக்களின் பயண செலவுகளை அதிகரிக்கும் இந்த முடிவு, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களை பெரிதும் பாதிக்கும்.
மக்களின் வாழ்வாதார செலவுகள் ஏற்கனவே உயரும் நிலையில், அடிப்படை போக்குவரத்து சேவையில் கூட கட்டண உயர்வு அறிவிப்பது சரியானது அல்ல. ரயில்வே துறை சேவை மனப்பான்மையுடன் செயல்படவேண்டும். எனவே, இந்த கட்டண உயர்வை ஒன்றிய அரசாங்கம் மீண்டும் பரிசீலித்து, மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முன்பிருந்தது போல் கட்டணம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஒன்றிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post ரயில்வே துறையில் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் கட்டணம் இருக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.
