×

கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: தேர்வுத்துறை அதிரடி

சென்னை: கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வுத்துறை பரிந்துரை செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வுகள் என்பது வரக்கூடிய மார்ச் 1ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதியும், செய்முறை தேர்வு வருகின்ற 12ம் தேதி தொடங்குகிறது.

பொதுத்தேர்வுகள் நெருங்கி வருவதால் நேற்று திருச்சியில் முதன்மை கல்வி அலுவலர்கள் உடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பொதுத்தேர்வு விவகாரம் தொடர்பாக விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு தேர்வுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு தொடங்க உள்ள பொதுத்தேர்வுகளில் 1,000 ஆசிரியர்களையும் விடுக்கப்பட்டுள்ளது. எந்த காரணம் கொண்டும் பொதுத் தேர்வுகளை கண்காணிப்பது, விடைத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட எந்த பணிகளிலும் இந்த ஆயிரம் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post கடந்த ஆண்டு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத 1,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: தேர்வுத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED புதுச்சேரியில் முழு அடைப்பு...