×

பிரதமர் மோடி 6ம் தேதி இந்தோனேசியா செல்கிறார்

புதுடெல்லி: பிரதமர் மோடி வரும் 6ம் தேதி இந்தோனேசியா செல்கிறார். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 6 மற்றும் 7ம் தேதிகளில் ஆசியான்- இந்தியா மற்றும் கிழக்கு ஆசியா உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ விடுத்த அழைப்பை ஏற்று மோடி இந்தோனேசியா செல்கிறார் என ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. ஆசியான் அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்,தாய்லாந்து, புருனே, வியட்னாம் உள்ளிட்ட 10 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

The post பிரதமர் மோடி 6ம் தேதி இந்தோனேசியா செல்கிறார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Indonesia ,New Delhi ,Prime Minister Modi ,ASEAN ,Modi ,Dinakaran ,
× RELATED மருத்துவமனை, பொது இடங்களில் தீ...