×

பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்


ஜார்ஜ்டவுன்: பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தின் 3வது கட்டமாக வெஸ்ட் இண்டீசின் கயானா சென்றார். அங்கு தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்குள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார்.

அங்குள்ள மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்திப் பாடல்களைப் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். இந்நிலையில், அதிபர் முகமது இர்பான் அலி மற்றும் பிரதமர் மோடி கயானாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்தனர். அப்போது பிரதமர் மோடி, “இரு நாடுகளையும் கிரிக்கெட் இணைத்துள்ளது’’ என தெரிவித்தார்.

The post பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Prime Minister Narendra Modi ,Georgetown ,Narendra Modi ,Guyana, West Indies ,Modi ,George Town ,President of ,Guyana ,Mohammad Irfan Ali ,Dinakaran ,
× RELATED அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ்...