×

ஜனாதிபதியின் 14 கேள்விகள் உச்சநீதிமன்றம் அவமதிப்பு: திருமாவளவன் பேட்டி

திருச்சி: திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று அளித்த பேட்டி: திருச்சியில் வரும் 31ம் தேதி நடக்கவிருந்த மதசார்பின்பை காப்போம் பேரணி ஜூன் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விவாகரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசு தலைவரை கொண்டு பாஜ அரசு 14 கேள்விகளை கேட்க வைத்துள்ளது. இந்தியா கூட்டணியில் திமுக முக்கிய அங்கமாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான், கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது.

அதிமுக, பாஜ இணைந்து தேர்தலை சந்திப்போம் என கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை. அவர்கள் கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தேமுதிக இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜனாதிபதியின் 14 கேள்விகள் உச்சநீதிமன்றம் அவமதிப்பு: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Thirumavalavan ,Trichy ,Liberation Tigers of Tamil Nadu ,Save Secularism ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்