- பொதட்டூர்பேட்டை பாரூர் வட்டார ஆலோசனை கூட்டம்
- திருத்தணி
- திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
- பொதட்டூர்பேட்டை பாரூர் அதிமுக
- மாநில செயலாளர்
- ஜனாதிபதி
- பேரூர்
- அரசு
- ஏஜி ரவிச்சந்திரன்
- பள்ளிக்கல்வி ஒன்றியம்
- டிடி சீனிவாசன்
- பொதட்டூர்பேட்டை பாரூர் கவுன்சில் கூட்டம்
- தின மலர்
திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பொதட்டூர்பேட்டை பேரூர் அதிமுக சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பேரூர் செயலாளர், பேரூராட்சி தலைவர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா, அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில், 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க நிர்வாகிகள் கடினமாக உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், முன்னாள் ஆவின் மாவட்ட தலைவர் ஜெ.த.கவிச்சந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் குமரேசன், சக்கரப்பன், உமாபதி, ஜீவானந்தம், வழக்கறிஞர் டில்லி, சவுட்டூர் கோபால், டி.எஸ்.குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post பொதட்டூர்பேட்டை பேரூர் அதிமுக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.