×

உயர்சிறப்பு மருத்துவ படிப்பு தேர்வு தேதி: குழப்பம் நீடிப்பு

சென்னை: உயர்சிறப்பு மருத்துவ படிப்பு தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பதில் குழப்பத்தால் டாக்டர்கள் தவித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் டி.எம்., எம்.சி.எச். இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு டிசம்பரில் நடக்க இருந்தது. நவம்பர் 2வது வாரத்திலேயே தேர்வு கட்டணத்தை வசூலித்து ஹால் டிக்கெட் தரும் நடவடிக்கை தொடங்கும். தேர்வுக்கான அட்டவணை வெளியிட்டுவிட்டு திடீரென்று அதனை எம்.ஜி.ஆர். பல்கலை. திரும்பப்பெற்றதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எப்போது தேர்வு நடைபெறும் என்பது பற்றி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழ்நாடு அரசு தலையிட்டு குழப்பத்துக்கு தீர்வுகாண வேண்டும் என்று டாக்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post உயர்சிறப்பு மருத்துவ படிப்பு தேர்வு தேதி: குழப்பம் நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...