×

பொன்னேரி நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் ரோடு ஷோ மூலம் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் பங்கேற்பு

பொன்னேரி: பொன்னேரி அருகே ஆண்டார்குப்பத்தில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரோடு ஷோ மூலம் மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே.ரமேஷ்ராஜ் சார்பில் திமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதியில் அடங்கிய ஆண்டார்குப்பம் கிராமத்தில் நேற்று தமிழ்நாடு அரசின் சார்பில் 2 லட்சம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்எஸ்கே.ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில், வல்லூர் 100 அடி சாலையில் இருந்து மீஞ்சூர், பொன்னேரி, மாதவரம், ஆண்டார்குப்பம் வரை வழிநெடுகிலும் கட்சி கொடிக்கம்பங்கள், வாழைமரம் உள்பட பல்வேறு காய்கறி அலங்கார தோரணங்களுடன் திமுக நிர்வாகிகளால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், பொன்னேரியில் இருந்து ஆண்டார்குப்பம் வரையிலான 4 கிமீ தூரத்துக்கு, முக்கிய இடங்களில் ரோடு ஷோ மூலம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே.ரமேஷ்ராஜ் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகள், அந்தந்த அணிகளின் பொறுப்பாளர் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

The post பொன்னேரி நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் ரோடு ஷோ மூலம் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜ் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Bonneri Welfare Assistance ,Rameshraj ,BONNERI ,WELFARE ASSISTANCE CEREMONY ,ANDARKUPPA NEAR BONNERI ,MINISTER ,MRS. K. ,District ,Manager ,MSK ,Stalin ,Dimuka ,Ramesh Raj ,THIRUVALLUR ,EAST DISTRICT ,BONNERI DISTRICT ,Dinakaran ,
× RELATED ரூ.1.98 கோடியில் கட்டப்பட்ட இசை முரசு...