×

பொங்கல் திருநாளில் சி.ஏ தேர்வு; நாடாளுமன்றத்தில் கண்டிப்போம்.! கனிமொழி எம்பி பேட்டி

மீனம்பாக்கம்: திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி, நேற்று மாலை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 2 நாட்களுக்கு முன்னதாகவே, எம்பிக்கள் கூட்டத்தை சென்னையில் நடத்தி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை மிகத் தெளிவாக அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி தமிழ்நாட்டு பிரச்னை, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி ஆகியவைகளை தொடர்ந்து வலியுறுத்துவோம். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதியையும் நிறுத்தி, இந்தியை தொடர்ந்து, தமிழக மக்களிடம் கட்டாயமாக திணித்துக் கொண்டு இருக்கிறது. அதையும் எதிர்த்து பேசுவோம்.
அதோடு இன்று தற்போது மீண்டும் ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் தமிழர்கள் கொண்டாடும் முக்கியமான விழா பொங்கல் தமிழர் திருநாள். அன்றைய தினம் சிஏ பவுண்டேஷன் தேர்வு நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்வு கார்ப்பரேட் நிறுவனங்களின் துறைகளுக்கு கீழே வரக்கூடியது. எனவே ஒன்றிய அரசு நினைத்தால், அந்த தேதியை மாற்றி அமைக்க முடியும். எஸ்பிஐ வங்கி தேர்வு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, இதைப்போல் பொங்கல் பண்டிகை தேதியில் அறிவித்தது போல், இப்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராடி நிச்சயமாக தேதியை மாற்ற நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

The post பொங்கல் திருநாளில் சி.ஏ தேர்வு; நாடாளுமன்றத்தில் கண்டிப்போம்.! கனிமொழி எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Pongal ,Nilingual ,DIMUKA ,KANIMOZHI MP ,MINISTER ,STALIN ,CHENNAI ,Pongal Thirunalil ,Kanimozhi MB ,
× RELATED பொங்கல் நாளில் யுஜிசி – நெட் தேர்வு;...