×

‘இந்திய மக்களாகிய நாங்கள்..’ சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை பாதுகாப்போம்: அரசியல் சாசனத்தின் முகவுரையை பகிர்ந்த நடிகைகள்

சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் மலையாள திரைப்பிரபலங்கள் பலர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்திய மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட சோசியலிச, சமய சார்பற்ற ஜனநாயக குடியரசாக அமைப்பதற்கும். அதன் அனைத்து குடிமக்களுக்கும் நீதி கிடைக்கவும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை பாதுகாக்கவும் உறுதி கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன், ரீமா கலிங்கல் உள்ளிட்டோர் பகிர்ந்துள்ளனர். மேலும், இயக்குனர்கள் ஜோ பேபி, ஆஷிக் அபு உள்ளிட்டோரும் இதனை தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதனை பகிர்ந்துள்ள எம்.பி. சு.வெங்கடேசன்;

உயிருள்ள உடலுக்கு மூச்சுக்காற்று போல இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு “மதச்சார்பின்மை” என்ற கோட்பாடு என குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியர்களாகிய நாங்கள்” என்கிற மகத்தான சொற்களோடு துவங்கும் அரசியல் சாசனத்தின் முகவுரையை இன்றைய நாளில் மறுபடியும் நினைவுகூறுவோம்.

இன்குலாப் ஜிந்தாபாத்

ஜெய்ஹிந்த்

தேசம் காப்போம். என அவர் தெரிவித்துள்ளார்.

The post ‘இந்திய மக்களாகிய நாங்கள்..’ சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை பாதுகாப்போம்: அரசியல் சாசனத்தின் முகவுரையை பகிர்ந்த நடிகைகள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ram Temple ,Kodamuzku ,Ayodhya ,India ,
× RELATED அயோத்தி ராமர் கோயிலில் கோபுரம்...