×

எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை: சசிகலா அறிக்கை

சென்னை: எதுவும் அறியாத அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்று சசிகலா கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாஜ தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜெயலலிதாவின் சாதனைகளை பற்றியெல்லாம் எதுவும் அறியாத அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றே கருதுகிறேன். ஆனால் அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. மக்கள் யாரும் அண்ணாமலையின் பேச்சை ரசிக்கவில்லை. பொறுப்பற்றவர்கள் பேசும் இதுபோன்ற பேச்சுக்களைபுறந்தள்ளிவிட்டு மக்கள் அளித்த தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்பதை மனதில் வைத்து மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவோம்.

The post எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை: சசிகலா அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Sasikala ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும்...