- வாணியம்பாடி
- சென்னை
- சந்திரா
- கிருஷ்ணகிரி
- குற்றப்பிரிவு ஆவணக் காப்பகம்
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- நிதிஷ்செல்வன்
- ஆகாஷ்செல்வன்
வாணியம்பாடி: கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் சந்திரா(49). இவர் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பக சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். இவரது மகன்கள் நித்திஷ்செல்வன்(22), ஆகாஷ்செல்வன்(17). நேற்றுமுன்தினம் சென்னையில் உள்ள கல்லூரியில் ஆகாஷ்செல்வனை சேர்ப்பதற்காக காரில் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர். அப்போது காரில் சந்திராவின் அண்ணனான சென்னை போலீஸ் அகாடமி அமைச்சுப்பணியாளர் பிரிவு போலீஸ்காரர் சரவணன்(57) என்பவரும் உடன் வந்தார்.
இவர்களது கார் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே வந்தபோது சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது திடீரென மோதியது. இதில் சரவணன் பலியானார். மற்ற 4 பேரும் லேசான காயத்துடன் தப்பினர்.
The post வாணியம்பாடி அருகே லாரி மீது கார் மோதல்; சென்னை போலீஸ்காரர் பலி: பெண் எஸ்ஐ உட்பட 4 பேர் தப்பினர் appeared first on Dinakaran.
