×

பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை பொறுத்தவரை பிளஸ்2 வகுப்புக்கு மார்ச் 1 முதல் 22ம் தேதி வரையிலும், பிளஸ் 1க்கு மார்ச் 4 முதல் 25ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை 12ம் தேதி முதல் நடத்த தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. அதன்படி பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது. இது 17ம் தேதி வரை நடக்கும்.

இதையடுத்து, சென்னையில் மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று காலை வந்த பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி செய்முறைத் தேர்வு மையங்களை பார்வையிட்டார். இதையடுத்து, 11 ம் வகுப்பிற்கு பிப்ரவரி 19ம் தேதி முதல் 24 ந் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் நடத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறது.

அதன்படி சென்னை மாவட்டத்தில் 12 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் இரண்டுகட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 249 பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் சுற்று செய்முறைத் தேர்வு நேற்று(12ம் தேதி) முதல் 17 ந் தேதி வரையிலும், 2ம் சுற்று பிப்ரவரி 19ம் தேதி முதல் 23ம் தேதி வரையும் நடக்கிறது.

பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப செய்முறைத்தேர்வினை அதிகப்பட்சமாக ஒரு நாளைக்கு 4 பிரிவுகளாக நடத்தலாம். ஒரு பாடத்தில் செய்முறைத்தேவுக்கு மாணவர்களின் எண்ணிக்கை 120க்கு கீழே இருந்தால் அவர்களுக்கு ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று தொடங்கிய செய்முறைத் தேர்வில் அறிவியல் பாடங்களில் உள்ள பாடப்பிரிவுகளில் தேர்வு எழுத உள்ள சுமார் 5 லட்சம் மாணவ மாணவியர் செய்முறைத் தேர்வில் பங்கேற்கின்றனர்.

The post பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சரக்கு போக்குவரத்தை ஒருங்கிணைக்க...