×

பெரும்பாக்கத்தில் கணவரை பிரிந்து அண்ணன் வீட்டில் 3 மகளுடன் வசித்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் எழில்நகர் பிளாக் 11ல் வசித்து வந்தவர் ஐஸ்வரியா (34). இவரது கணவர் இளையராஜா. இவர்களுக்கு திருமணமாகி 17 வருடம் ஆகிறது. 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவரை பிரிந்து தனது அண்ணன் ஆனந்தராஜ் வீட்டில் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஹாஸ்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு வேலை முடிந்து 11 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், செல்போனில் பேசிவிட்டு படுக்கையறைக்கு சென்று உள்தாழ்ப்பாள் போட்டுள்ளார். வெகுநேரமாக கதவை திறக்காததால் இவரது அண்ணன் மகன் விக்னேஷ்வர் கதவை தட்டியுள்ளார்.

பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஐஸ்வரியா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரும்பாக்கத்தில் கணவரை பிரிந்து அண்ணன் வீட்டில் 3 மகளுடன் வசித்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Velacheri ,Aishwarya ,Efennagar Block 11 ,Dinakaran ,
× RELATED சென்னை வேளச்சேரி பரங்கிமலை இடையே 2025...