×

பெரு நாட்டில் கோமாளிகள் தினம் கோலாகல கொண்டாட்டம்: தலைநகர் லிமாவில் கோமாளிகள் வண்ணமய பேரணி..!!

லிமா: பெரு நாட்டில் கோமாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் திரளானோர் கலந்துக்கொண்டு வண்ணமயமாக்கினர். பெரு நாட்டின் தனது வருமானத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்காக வழங்கிய டோனி பெரிஜில் என்பவர் கடந்த 1987ம் ஆண்டு மே 25ம் தேதி உயிரிழந்தார். ஏழைகளின் கோமாளி என அழைக்கப்பட்ட அவரின் நினைவுதினம் ஆண்டுதோறும் அங்கு கோமாளிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைநகர் லிமாவில் கண்கவர் பேரணி நடைபெற்றது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தொழில்முறை கோமாளிகள் கலந்துக்கொண்டனர். மக்கள் சோகமாக இருந்தாலும், அரசியல் சூழல், வறுமை உள்ளிட்ட சூழல்களில் அவர்களை சிரிக்க வைப்பதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளதாக கோமாளி வேடமிட்ட ஒருவர் தெரிவித்தார். கோமாளிகள் கலாச்சாரத்தின் ஒரு அடையாளம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

The post பெரு நாட்டில் கோமாளிகள் தினம் கோலாகல கொண்டாட்டம்: தலைநகர் லிமாவில் கோமாளிகள் வண்ணமய பேரணி..!! appeared first on Dinakaran.

Tags : Cumbers Day in Peru ,Lima ,Ramanor ,cumbers ,Peru ,Cumbers Day in ,Cumbery ,Rally of Cumbers in ,Dinakaran ,
× RELATED காஸ் ஏஜென்சிக்கு வந்து சென்றபோது...