×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

ஓசூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று தண்ணீர் வரத்து குறைந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க கடந்த 20 நாட்களாக, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருவதால், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் ஆர்.சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Cauvery River ,Ogenakkal ,Cauvery Falls ,Cauvery River… ,Dinakaran ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...