×

பெரியபாளையம் அருகே மாட்டுத்தொழுவமாக மாறிய நூலகம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, தண்டுமாநகர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில், கடந்த 2009ம் ஆண்டு நூலகம் கட்டப்பட்டது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் தினந்தோறும் வந்து புத்தகங்களை படித்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த நூலகத்தில் வேலை பார்த்து வந்த நூலக அலுவலருக்கு போதிய சம்பளம் இல்லாததால் அவர் பணியில் இருந்து விலகினார்.

இதனால், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் நூலகம் மூடப்பட்டது. பல வருடங்களாக நூலகம் மூடியே கிடப்பதால், நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் அனைத்தும் வீணாகி வருகிறது. மேலும், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அப்பகுதியை சேர்ந்த சிலர் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை திருடியும், இரவு நேரங்களில் நூலக கட்டிட வளாகத்தில் மாடுகளை கட்டிப்போட்டும் உள்ளனர்.

இதனால், நூலகம் மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது. எனவே, இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, நூலகத்திற்கு அதிகாரியை நியமித்தும், நூலக வளாகத்தில் மாடுகளை கட்டிப்போடுபவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தும், நூலகத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளகர்.

The post பெரியபாளையம் அருகே மாட்டுத்தொழுவமாக மாறிய நூலகம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Oothukottai ,Tandumanagar ,
× RELATED பெரியபாளையம் குருவாயல் கிராமத்தில்...