×

ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல்; தமிழ்நாட்டில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்

சென்னை: ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்றும், இதில் 18, 19 வயதுடைய புதிய வாக்காளர்கள் 10,90,547 பேர் உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தேர்தலை முன்னிட்டு பட்டியலில் இடம் பெறாதவர்களின் பெயர்களை சேர்க்க அவகாசம் அளிக்கப்பட்டது.

விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 3,06,23,667 பேர், பெண் வாக்காளர்கள் 3,17,16,069, மூன்றாம் பாலினத்தவர் 8,465 பேர். இதில் 18 முதல் 19 வயதுடைய புதிய வாக்காளர்கள் 10,90,547 பேர். 85 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6,13,991 பேரும், ஊனமுற்றவர்கள் 4,61,703 பேரும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல்; தமிழ்நாட்டில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,Satya Pratha Chagu ,CHENNAI ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ல் நடைபெறவுள்ள வாக்கு...